Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபட திட்டம்

புதுடெல்லி: ரூ.7,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்க மார்ச் 1-ம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கான பயண விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளி யிட்டுள்ளது. அதன் விவரம்:

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்தைத் தொடர்ந்து பி ரதமர் நரேந்திர மோடி பிப்.28-ம் தேதி இரவு 9 மணி அளவில் சென்னை வருகிறார். மறுநாள் (மார்ச் 1) காலை 11.45 மணி அளவில் புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்கு ரூ.2,700 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங் களுக்கும் அடிக்கல் நாட்டுகி றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அதன் பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் மதுரை செல் லும் பிரதமர், ரூ.4,400 கோடி மதிப்பிலான நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்ட இருக் கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி யில் அவர் உரை நிகழ்த்த இருக் கிறார். இதையடுத்து, மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன் றத்தில் உள்ள அருள்மிகு சுப்ர மணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

புதுச்சேரி திட்டங்கள்: பிரத மர் இ-பேருந்து சேவை திட் டத்தின் கீழ் மின்சார பேருந்து களின் சேவையை பிரதமர் தொடங்கிவைக்கிறார். பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான குடியிருப்பு கள் மற்றும் புதுச்சேரி அரசின் முக்கியமான கழிவுநீர் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்கிறார். காரைக் காலில் உள்ள தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் ஏபிஜே அப்துல் கலாம் பிளாக், கங்கா விடுதி ஆகியவற்றை துவக்கி வைக்கும் பிரதமர், ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளார்.

750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காரசூர் - சேதாரபேட்டை தொழிற் பேட்டையை நாட்டுக்கு அர்ப் பணிக்கும் பிரதமர், 41 கிராமப் புற சாலைகள் கட்டுமானம், சுகாதாரத் திட்டங்கள் ஆகி யவற்றை துவக்கி வைக்கிறார். மேலும், நகர்ப்புற சாலைகள், வடிகால் அமைப்புகள், மாண வர் விடுதிகள், விளையாட்டு வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக திட்டங்கள்: மொரப் பூர், பொம்மிடி, வில்லி புத்தூர், சோழவந்தான், மணப் பாறை, பொள்ளாச்சி, காரைக் குடி, திருவாரூர் ஆகிய மேம் படுத்தப்பட்ட ரயில் நிலை யங்களை திறந்து வைக்கும் பிரதமர், சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதையை நாட் டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கும்பகோணம், ஏர்காடு, வேலூர் ஆகிய நகரங்களில் ஆகாஷவாணி பண்பலை வானொலிகளை பிரதமர் தொடங்கிவைக்கிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை 332ஏ-ன் கீழ் மரக்காணம்-புதுச்சேரி சாலை விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை 87ன் கீழ் பரமக் குடி - ராமநாதபுரம் சாலை விரிவாக்கம் ஆகிய திட்டங் களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.