திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கலை யரங்கத்தில் மாசி இசைத் திரு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல் வேறு நகரங்களிலிருந்து வந் திருந்த இசைப் பள்ளி மாண வர்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப் படுத்தினர்.
இந்த இசைத் திருவிழாவில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங் களிலிருந்து நூற்றுக்கும் மேற் பட்ட மாணவர்கள் ஆர்வத் துடன் கலந்து கொண்டனர். விழாவில் கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம் வாசித்தல் மற்றும் பரத நாட்டியம் உள்ளிட்ட பல் வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடை பெற்ற இந்த நிகழ்வில், சென்னை மறைமலைநகர் சுருதிலயா இசைப் பள்ளியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங் கேற்றனர். இசைப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மாணவர் மோனிஷ் விஜய் பாடிய தனிப் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்கள் பல்வேறு பக்திப் பாடல்களைப் பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற அனைத்து மாண வர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த இசைத் திருவிழாவைக் கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக் கான பக்தர்களும், மாணவர் களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டு ரசித்தனர்.