Saturday, 20 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறையின் நூதன பிளக்ஸ் விழிப்புணர்வு !

கரூர்: தமிழகத்தில் வரும் 23 ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

கரூர் மாவட்ட நிர்வாகம் ஆங்காங்கே பல்வேறு விழிப்புணர்வு நடத்தியும், பிளக்ஸ் பதாகைகள் வைத்த நிலையில், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பேக்கரிகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களும் வாக்களித்து 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடத்த தொழிலாளர் நலத்துறை சார்பில் கரூர் மாநகராட்சியில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பது நம் அனைவரின் கடமை, 100 சதவிகிதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் அவர்களின் தீவிர முயற்சியில் கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் பகுதியிலும், இதே போல சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடைகள், ஹோட்டல்களிலும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பிலக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வு வார்த்தைகளால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும், கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் தேர்தலில் வாக்களிப்பது குறித்த அவசியம் என்பது குறித்தும் விழிப்புணர்வும் நிகழ்த்தப்பட்டது. அனைவருக்கும் இந்த பிளக்ஸ் பதாகைகள் உணர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை