Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஜூன் 11-ல் சோனியா, ராகுல் காந்தி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் விஜய் ஜூன் 11-ம் தேதி சந்திப்பார் என காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், “முதல்வர் விஜய் தனது இந்த டெல்லி பயணத்தை முழுக்க முழுக்க அரசியல் பயணமாக வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் என நினைக்கிறேன். தற்போது பிரதமரை சந்தித்து சென்றுவிட்டார்.

அடுத்ததாக ஜூன் 11-ம் தேதி முதல்வர் விஜய் டெல்லி வருகிறார். அப்போது அவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் கண்டிப்பாக சந்திப்பார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலர் இன்று டெல்லி வந்துள்ளனர். அதோடு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் முதல்வரோடு சகஜமாக பேச முடியாத நிலை ஒரு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிலை திறப்பு விழாவையும் விஜய் ஒத்திவைத்துள்ளார். எனவே, முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்ப ஏதுமில்லை” என தெரிவித்தார்.