Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தவெக ஆட்சி அமைக்க விஜய்க்கு கிடைக்குமா மேஜிக் எண் 118?

தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான ‘மேஜிக் எண் 118’-ஐ பெற தவெக முயற்சித்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்க கட்சிகள் போடும் ‘கணக்கு’கள் குறித்து பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு, கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக தவிர்த்து காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் ஆகியவை தலா 2 தொகுதிகள், தேமுதிக, அமமுக தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளில் சிலவற்றை தனது கூட்டணிக்கு கொண்டுவர தவெக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டணிக் கட்சிகளை நம்பியபடி ஆட்சி நடத்தும் ‘மைனாரிட்டி அரசு’ என்பது மதில் மேல் பூனை நிலைதான் என்றாலும், அதனை லாவகமாக விஜய் கையாளுவார் என தவெகவினர் நம்புகின்றனர்.

அதேபோல தவெகவின் எழுச்சியை இனியும் புறந்தள்ள முடியாது என அரசியல் கட்சிகளும் இப்போது உணர்ந்திருக்கும். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான ‘மேஜிக் எண் 118’ எளிதாக கிடைக்கும் என்ற உறுதியோடு உள்ளது தவெக.