Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை

திருமலை: கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.

தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. அதனால் உண்டியல் காணிக்கை மே மாதம் ரூ.120 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 1.12 கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

திருமலையில் 1.21 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகி உள்ளது. நேர்த்திக்கடனான 14,38,385 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.கடந்த மே மாதத்தில் தினமும் சராசரியாக 17 மணி 25 நிமிடம் சாமானிய பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதிகபட்சமாக மே 24-ம் தேதி 98,058 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.