Sunday, 21 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைவு!

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஏப்.17) பவுனுக்கு ரூ.1,200 என குறைந்தது. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை ரூ.2,400 என உயர்ந்திருந்தது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 மற்றும் பவுனுக்கு ரூ.1,200 என விலை குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,210-க்கும், ஒரு பவுன் ரூ.1,13,680-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.1,312 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,24,016-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.94,880-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275, ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை ஆகிறது.