Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்

சென்னை: 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:

> குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

> சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

> காத்திருப்பு பட்டியலில் இருந்த அவினாஷ் குமார் இப்போது காவல் தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

> வடக்கு மண்டல ஐஜியாக பிரவீன் குமார் அபினபு நியமிக்கப்பட்டுள்ளார்.

> சரவணா சுந்தர் ஐபிஎஸ் தற்போது சென்னை குற்றப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

> காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் இப்போது வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

> தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த பவன்குமார் ரெட்டி இப்போது கோயம்புத்தூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

> கோயம்புத்தூர் மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் இப்போது தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

> திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த சதீஷ்குமார் இப்போது பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

> விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ரவிந்திர குமார் குப்தா இப்போது பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.