Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,280 சரிந்த தங்கம் விலை

சென்னை: சென்னையில் இன்று (மே.15) காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், மாலையில் பவுனுக்கு மேலும் ரூ.1,480 குறைந்தது. அந்த வகையில் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 2,280 சரிந்தது.

இந்​தியா தனது தங்க நுகர்​வில் கிட்​டத்​தட்ட முழு​வதை​யும் இறக்குமதி மூல​மாகவே பூர்த்தி செய்​கிறது. இந்​நிலை​யில் அந்நியச் செலா​வணிக் கையிருப்​பைப் பாது​காக்க உதவும் வகையில், ஓராண்​டுக்கு தங்​கம் வாங்​கு​வதை தவிர்க்​கு​மாறு மக்களுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்​தி​னார்.

தங்​கம், வெள்​ளி​யின் வெளி​நாட்டு கொள்​முதலைக் கட்டுப்​படுத்​த​வும் நாட்​டின் அந்​நியச் செலா​வணி கையிருப்பு மீதான அழுத்​தத்​தைக் குறைக்​க​வும் எடுக்​கப்​படும் முயற்​சிகளின் ஒரு பகு​தி​யாக, மே 12-ம் தேதியன்று தங்​கம் மற்​றும் வெள்ளி மீதான இறக்​குமதி வரியை மத்திய அரசு 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது.

இதனைத் தொடர்ந்து மே 13-ம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினமே மாலையில் குறைந்தாலும், நேற்று (மே 14) மீண்டும் உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின், மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765-க்கும், பவுனுக்கு ரூ.1,18,120-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.


தங்​கம் மற்​றும் வெள்ளி மீதான இறக்​குமதி வரியின் தாக்கத்தை தாண்டி, ஈரான் - அமெரிக்கா மோதல் போக்கு உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் தங்கம் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதுவும் ஆபரணத் தங்கம் விலை சரிவுக்கு காரணம். அதேவேளையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பின் தாக்கத்தால் அமெரிக்க டாலர் மதிப்பு கூடி வருகிறது.

இதனிடையே, இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96 என கடும் வீழ்ச்சி கண்டதும் கவனிக்கத்தக்கது.

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,280 சரிந்த தங்கம் விலை

4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - தாக்கம் என்ன?


தங்கம் விலை

வெள்ளி விலை

gold rate

Silver Rate





அதிகம் வாசித்தவை...

தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்: திட்டத்தை மறுசீரமைக்க முடிவு

செய்திப்பிரிவு


19 hours ago

மகளிர் உரிமைத் தொகைத் திட்ட மறுசீரமைப்புக்கு அவகாசம் தேவை: முதல்வர் விஜய்

மகளிர் உரிமைத் தொகைத் திட்ட மறுசீரமைப்புக்கு அவகாசம் தேவை: முதல்வர் விஜய்

அனலி


14 May 2026

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

அனலி


14 May 2026

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஒழுங்கு நடவடிக்கை: மேலாண் இயக்குநர் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஒழுங்கு நடவடிக்கை: மேலாண் இயக்குநர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு


19 hours ago

by Taboola

Sponsored Links

You May Like


Start Forex Trading. Get a 100% Welcome BonusLFind out why you should join iFOREX, a regulated broker with over 25 years of experience. Open your iFOREX account and enjoy a 100% Welcome Bonus. Sign up today!iFOREX


Velachery’s Luxury Launch — Check Prices & OffersDon’t miss launch pricing on 3–5 BHK luxury homes in Velachery. Explore now & schedule a site visit!Brigade


Discover Kitchen Equipment, F&B Brands & premium HoReCa suppliers at Expo 2026 IndiaLooking to start or expand your hotel, café, or restaurant? India HoReCa Expo 2026 is your platform to source suppliers, discover innovations, and network with top hospitality professionals. Pre-register now.India HoReCa Expo


New Pricing: Grammarly's India Plus Plan Is Available NowWriting is a reflection of you. Grammarly Plus ensures your words are clear, professional, and strong.Grammarly


Hindu Tamil Logo white


Follow Us








SUBSCRIBE

  1. செய்திகள்
  2. தமிழகம்
  3. இந்தியா
  4. உலகம்
  5. வணிகம்
  6. விளையாட்டு
  7. ஆன்மிகம்
  8. தொழில்நுட்பம்
  9. வாழ்வியல்
  10. கல்வி
  11. சுற்றுலா
  12. க்ரைம்
  13. வேலை வாய்ப்பு
  14. சிறப்புப் பக்கம்
  15. வணிக வீதி
  16. வெற்றிக் கொடி
  17. நலம் வாழ
  18. ஆனந்த ஜோதி
  19. இளமை புதுமை
  20. இந்து டாக்கீஸ்
  21. மாயா பஜார்
  22. உயிர் மூச்சு
  23. கல்வி - வேலை வழிகாட்டி
  24. பெண் இன்று
  25. வாழ்வு இனிது
  26. நிலமும் வளமும்
  27. சொந்த வீடு
  28. களஞ்சியம்
  29. சினிமா
  30. தமிழ் சினிமா
  31. தென்னிந்திய சினிமா
  32. பாலிவுட்
  33. ஹாலிவுட்
  34. உலக சினிமா
  35. கருத்துப் பேழை
  36. தலையங்கம்
  37. சிறப்புக் கட்டுரைகள்
  38. வீடியோக்கள்
  39. அரசியல்
  40. சினிமா
  41. ஆன்மிகம்
  42. பொது
  43. About us
  44. Contact Us
  45. Advertise
  46. Terms & conditions
  47. FAQ
  48. Privacy Policy

Copyright © 2025, இந்து தமிழ் திசை

Powered by Quintype