Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மினிமம் பேலன்ஸ் அபராதம்: நான்கு நிதியாண்டுகளில் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்

புதுடெல்லி: கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதமாக பெற்ற தொகை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை மேம்படுத்தும் வகையில் நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பதை நிறுத்தி உள்ளது. மீதமுள்ள இரண்டு வங்கிகள் அந்த தொகையை சீரமைத்துள்ளது.

மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லாத அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு சேவையை பெறும் 73 வாடிக்கையாளர்களுக்கு அபராதம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.