Friday, 16 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.29 கோடி; 33 லட்சம் லட்டு விற்பனை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் கடந்த 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.28.94 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி உள்ளது.

பிரம்மோற்சவத்தில் 20 மாநிலங்களில் இருந்து 7,871 நடனக் கலைஞர்கள் 295 குழுக்களாக பங்கேற்று சிறப்பாக நடனமாடி அசத்தினர். முதன் முறையாக இம்முறை சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனியில் இருந்து நடனக் குழுவினர் பங்கேற்றனர். இந்த பிரம்மோற்சவத்தில் 60 டன் மலர்கள், 4 லட்சம் தனி பூக்கள், 80,000 சீசன் மலர்கள் உபயோகப்படுத்தப்பட்டன.


பாதுகாப்புக்கு 3000 போலீஸார், 2400 தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு ஊழியர்கள் பணியாற்றினர். கருட சேவைக்கு கூடுதலாக 1000 போலீஸார் நியமனம் செய்யப்பட்டனர். 3500 துப்புரவு தொழிலாளர்கள் இரவும் பகலுமாக பணி செய்தனர்.

பிரம்மோற்சவம் தொடங்கிய 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 8 நாட்களில் 5.67 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். ரூ.28.94 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி உள்ளன. 21.84 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2.04 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.