Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

யுஏஇ துறைமுகம் மீது ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் - பிரதமர் மோடி கண்டனம்

துபாய்: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) புஜைரா துறை​முகத்​தின் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யதில் 3 இந்​தி​யர்​கள் படு​கா​யம் அடைந்​தனர். இதற்கு பிரதமர் நரேந்​திர மோடி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல்போர் நடை​பெற்​றது. தற்​போது இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது. எனினும் ஹார்​முஸ் ஜலசந்​தியைஈரானும் அமெரிக்கா​வும் முடக்கி வைத்து உள்​ளன. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் நட்பு நாடான ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜைரா துறை​முகத்தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் 15 ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் ட்ரோன்​கள் மூல​மும் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் துறை​முக பகு​தி​யில் பணி​யாற்​றிய 3 இந்​தி​யர்​கள் படு​கா​யம் அடைந்​தனர்.

இதுகுறித்து அமீரக ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘ஈரான் வீசிய ஏவு​கணை​களில் பெரும்பாலானவற்றை நடு​வானில் அழித்​து​விட்​டோம். ஆனால் சில ஏவு​கணை​கள் எண்​ணெய் கிடங்​கு​களில் விழுந்து தீப்பற்றியது. 3 தொழிலா​ளர்​கள் காயமடைந்​தனர். அவர்​களுக்கு மருத்​து​வ​மனை​யில் உயர்தர சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது’’ என்று தெரி​வித்​தன.

இதுதொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஐக்​கிய அரபு அமீரகம் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் 3 இந்​தி​யர்​கள் காயமடைந்து உள்​ளனர். உள்​கட்​டமைப்​பு​கள், பொது​மக்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​தப்​படு​வதை மிக​வும் வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன். இந்த நேரத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு இந்​தியா துணை நிற்கும்.

ராஜ்ஜியரீ​தி​யிலும் பேச்​சு​வார்த்தை மூல​மும் அமை​தியை ஏற்​படுத்த இந்​தியா ஆதரவு அளிக்​கும். உலகத்​தின் எரிசக்தி தேவை, பிராந்​திய அமை​தியை கருத்​தில் கொண்டு ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற கடல்​வழி போக்​கு​வரத்தை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்​.

ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்க ராணுவத்தின் ஏற்பாட்டின்பேரில் ஐக்கிய அரபு அமீரக துணையுடன் ஹார்முஸ் ஜலசந்தியில் சில சரக்கு கப்பல்கள் கடந்து சென்று உள்ளன. இதன்காரணமாக ஐக்கிய அமீரக துறைமுகத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். அமெரிக்கா அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுப்போம். ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கி வந்த அமெரிக்க போர்க்கப்பல்களை எச்சரிக்கும் வகையில் சில ஏவுகணைகளையும் வீசினோம்” என்று தெரிவித்தன.