Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி; 250 பேர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு நடந்ததாக ஆப்கன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியிலும் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் தங்கள் தரப்பில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் மருத்துவமனையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதை ஆப்கானிஸ்தான் சுகாதார துறையின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சூழலில், அண்மைய காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல்​கள் அதி​கரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடங்கி மூன்று வார காலம் ஆகியுள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முன்பாக இரு தரப்பிலும் எல்லையோர பகுதியில் மாறி மாறி தாக்குதல் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.