Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.42 உயர்வு

புது டெல்லி: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.42 உயர்த்தப்பட்டு ரூ.3113.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

இதன்படி இன்று 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 42 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3113.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.11 உயர்த்தப்பட்டு ரூ.821.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல, சர்வதேச விமானங்களுக்கான ஜெட் எரிபொருள் விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை, ஒரு கிலோலிட்டருக்கு சுமார் 400 டாலர் குறைக்கப்பட்டு, சுமார் 1,100 டாலர் ஆக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கிலோலிட்டருக்கு ரூ.1,05,000 ஆக உள்ளது.