Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சென்னை மெட்ரோ ரயிலில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டால் ரூ.500 வரை அபராதம்!

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் போது, செல்போனில் அதிக சத்தத்துடன் வீடியோ பார்த்தாலோ அல்லது பாட்டு கேட்டாலோ ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் போது, பயணிகள் சிலர் தங்களது மொபைல் போனில் 'ஹெட்போன்' பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது. ரீல்ஸ் போன்ற வீடியோ பார்ப்பது. 'கேம்' விளையாடுகின்றனர். இது, சக பயணியருக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. இது குறித்து, பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது, செல்போனில் அதிக சப்தத்துடன் வீடியோ பார்த்தாலோ அல்லது பாட்டு கேட்டாலோ ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தண்டனைக்குரிய குற்றம்: இந்த செயல்கள் வாயிலாக அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில், மற்றவர்களுக்கு இடையூறு விளை விப்பதும் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்படும். இச்சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்தில் இருந்து அவர்கள் வெளி யேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, சக பயணியரின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்துக்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் 'ஸ்பீக்கர் மோட்' பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.