Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசும் ஈரான் 8 கி.மீ. பரப்பளவுக்கு சிதறி விழுவதால் கடும் சேதம்

இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின் றன.

அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையே 10-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. ஈரானுக்கு ஆதர​வாக லெப​னானை சேர்ந்த ஹிஸ்​புல்லா கிளர்ச்​சிப் படை இஸ்​ரேலை குறி​வைத்து ஏவு​கணை​களை வீசி வரு​கிறது. இதற்கு பதில டி​யாக வான், தரைவழி​யாக லெப​னான் மீது இஸ்​ரேல் ராணுவம் தீ​விர தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது. இதில் லெப​னான் முழு​வதும் 339 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் 20 அமெரிக்க ராணுவ தளங் களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இதுவரை 6 அமெரிக்க வீரர்கள் உயிரி ழந்து ள்ளனர். மேலும் ஈரான் தாக்குதலில் குவைத் தில் 6 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேர், சவுதி அரேபியாவில் 2 பேர், இராக்கில் 2 பேர், ஓமனில் ஒருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இஸ்​ரேலின் ராணுவ தலை​மையக​மான டெல் அவிவ் மற்​றும் முக்​கிய ராணுவ தளங்​கள், பல்​வேறு நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்​சி​யாக ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது. வான் வழி தாக்​குதலை முறியடிக்க இஸ்​ரேல் ராணுவம் சார்​பில் அயர்ன் டோம் மற்​றும் சி டோம் பாது​காப்பு கவச அமைப்​புகள் நிறு​வப்​பட்டுள்​ளன.

ஆனால் கடந்த சில நாட் களாக இஸ்ரேலை குறி வைத்து ஈரான் ராணுவம், தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி வருகிறது. ஈரானின் ஏவுகணை சுமார் 23,000 அடி உயரத்தில் வெடித்து 20 சிறிய குண்டுகளாக பிரிகிறது. இந்த கொத்து குண்டுகள் சுமார் 8 கி.மீ. பரப்பளவு வரை சிதறி விழுகின்றன. இவற்றை நடுவானில் இடைமறித்து அழிப்பது கடினமாக உள் ளது. இதனால் பல நகரங் களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

டெல் அவிவ் நகரில் மட் டும் 350-க்கும் மேற்பட்ட பொது பதுங்கு அரங்குகள் உள்ளன. டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்க ளில் பூமிக்கு அடியில் பிரம் மாண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக போர்க் காலங் களில் இஸ்ரேலில் உயிரி ழப்பு குறைவாக உள்ளது.