Saturday, 20 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

சென்னை: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த உயர்வு, இம்முறை ஹோலி பண்டிகைக்கு முன்பாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஹோலி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வருவதால், அதற்கு முன்பே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அகவிலைப்படி உயர்வை கணிக்க முக்கியமான அளவுகோலாக கருதப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) அறிக்கையை மத்திய தொழிலாளர் பணியகம் சமீபத்தில் வெளியிட்டது.

2025 டிசம்பர் மாதத்துக்கான இந்த குறியீட்டு மதிப்பு 148.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த தரவின் அடிப்படையில், இம்முறை அகவிலைப்படி சுமார் 2 சதவீதம் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 58 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இந்த உயர்வுக்குப் பிறகு 60 சதவீதமாக உயரக்கூடும் என கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

இந்த உயர்வு 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அறிவிப்பு மார்ச் மாதத்தில் வந்தாலும், ஊதிய உயர்வு ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும். இதனால் நிலுவை தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமை, ஊழியர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. முதல் உயர்வு ஜனவரி மாதத்திற்கும், இரண்டாவது உயர்வு ஜூலை மாதத்திற்கும் அமல்படுத்தப்படும். ஆனால் அறிவிப்புகள் பெரும்பாலும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு வெளியாகும் நடைமுறை இருந்து வருகிறது. அதனால் இந்த முறை ஹோலிக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியாகலாம் என்ற கணிப்பும் வலுத்துள்ளது.

அரசு ஊழியர் சம்பள உயர்வு

அகவிலைப்படி உயர்வு குறித்து அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பு தேசியத் தலைவர் மன்ஜீத் சிங் படேல் தெரிவித்ததாவது, இம்முறை ஹோலிக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அகவிலைப்படி வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம், பணவீக்கத்தால் ஊழியர்களின் வருமானத்தில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதாகும். அடிப்படை சம்பளம் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு மாற்றமின்றி இருக்கும்.