Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு

விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இ-வாடகை 2.0 ஆன்லைன் கைபேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரொம்ப ரொம்ப கம்மியான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வாங்க வாய்ப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கான கடன் உதவி திட்டங்கள், இயற்கை பேரிடரின் போது இழப்பீடு, மானிய உதவி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் எளிதில் வாடகைக்கு பெற்று பயன் பெறும் வகையில் "இ வாடகை-2.0" என்ற மேம்படுத்தப்பட்ட இ-வாடகை ஆன்லைன் கைபேசி செயலி ரூ.37.88 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதற்கான நடைமுறைகளை விவசாயிகள் எளிமைப்படுத்தி, வாடகைக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் ஆகியவற்றை இச்செயலி முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளம், உழவர் செயலியுடன் ஒருங்கிணைக்கப்படுவதால்,விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை தேவையான நேரத்தில் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலும். மேலும், இந்த செயலி விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் அல்லது தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கிடையேயான நேரடி தொடர்பை ஏற்படுத்தி, இடைத்தரகர்களின் தேவையின்றி சேவைகள் வழங்கப்படுவதால், இதன் காரணமாக கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக உழவு, விதைப்பு, அறுவடை போன்ற முக்கிய காலகட்டங்களில் வேளாண் இயந்திரங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம், விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற உதவுகிறது. இ வாடகை-2.0 செயலியில், விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை துறையானது.

கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் அல்லது தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படும். இச்செயலியில் இதுவரை, 892 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 5952 தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களும், செயலியில், வேளாண்மைப் பொறியியல் ஆக மொத்தம் 6844 சேவை வழங்குநர்கள். இயந்திரங்களையும் 9359 வேளாண் 6780 கருவிகளையும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக பதிவு செய்துள்ளனர்.

விவசாயப் பெருமக்கள் தங்களுக்கு தேவைப்படுகின்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர். நெல் நாற்று நடும் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், ட்ரோன்கள் போன்றவற்றினை இச்செயலி மூலம் எளிதாக வாடகைக்கு பெற்று பயன்பெறுமாறு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.