பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் ‘தாய்கிழவி’ திரைப்படத்தைத் தூத்துக்குடியில் உள்ள கே.எஸ்.பி.எஸ் திரையரங்கில் அவரே நேரில் கண்டு ரசித்தார்.
திரையரங்கிற்கு வந்த நடிகை ராதிகா மற்றும் படக்குழுழுவினரை திரையரங்க நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்கள் மலர்க்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் அவர் சிறிது நேரம் கலந்துரையாடினார். தங்களின் அன்பிற்குரிய நடிகையைத் திரையரங்கில் நேரில் பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.