சிம்ம பேரவையின் இனஎழுச்சியின் முப்பெரும் விழா பல்லாவரம் -துரைப்பாக்கம் ரோட்டில் நாடார்களுக்கு பாதியப்பட்ட பி.ஆர்.பேலஸில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மும்பெரும் விழா
கல்வி கடவுள் பாரதரத்னா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழா, நாடார் குல மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 64-வது பிறந்த நாள் விழா, சிம்மபேரவையின் 14ம் ஆண்டு ெதாடக்க விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா ஆகியவற்றை உள்ளடக்கி முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் வி.ஜி.சந்தோசம் நாடார்கள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திரைப்பட சண்டைப்பயிற்சியாளர் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நாடார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நாடார் சமுதாய சொந்தங்கள் அனைவைரயும் நாடார் குலதிலகம் சிம்மப்பேரவை நிறுவனத்தலைவர் டாக்டர் ராவணன் ஆ.இர.ராமசாமிநாடார் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
பாரத மாதா நண்பர்கள் அன்னதானக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன்
விழாவில் பாரத மாதா நண்பர்கள் அன்னதானக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் அவர்கள் பேசியதாவது:
இந்து கடவுளின் மிக முக்கியமானவரான இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி தன் நாட்டு மக்களை சந்தித்து நல்லாட்சியை தொடங்கி மக்களை மகிழ்ச்சி அடைய செய்தார். கா்மவீரர் பெருந்தலைவர் நம் நாட்டுக்கும் நாட்டு மக்களும் செய்த தொண்டுகளை பற்றி தற்போதுள்ள சமுதாய இளம் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து பேசினார்.
அதே போல் உலகெங்கும் கொண்டாடப்படும் தமிழ் கடவுள் முருகனுக்கும் நாடார் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பினைப் பற்றி பேசியதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் நாடார் சமுதாயத்தினருக்கும் உள்ள தொடர்பினை பேசினார். அவை பின்வருமாறு:
நாடாருக்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் முருகப் பெருமானின் மாசித்திருவிழா
திருச்செந்தூர் முருகப்பெருமானின் மாசித்திருவிழாவான 8ம் திருநாளில் கோவில் நடைபெறும் அனைத்தும் நிகழ்ச்சிகளும் சிவகாசி, தென்காசி, மதுரை, விருதுநகர் நாடார்களுக்கு பாத்தியப்பட்டதாகும். 9ம் திருநாள் மற்றும் 10 திருநாள்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி நாடார் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட நிகழ்ச்சிகளாகும். 10ம் திருநாள் அன்று தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு பத்திரிகை உலக ஜாம்பவான் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் முதலில் தேரின் வடத்தை தொட்டு இழுத்தபின்னரே திருச்செந்தூர் முருகப்பெருமானின் தேர் நகரத் தொடங்கும்.

வானை பிளக்கும் கைதட்டல்
இப்படி பலவகையான சமுதாய பணிகள் மற்றும் தொண்டுகளை நம் நாடார் சமுதாய பெரியவர்கள் செய்துவந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு வரும் காலகட்டத்தில் அதனை அவ்வப்போது ஒரு சில நம் சமுதாய தலைவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அதில் முக்கிய பங்களிப்பவர் அண்ணாச்சி, நாடார் குலதிலகம் சிம்மப்பேரவை நிறுவனத்தலைவர் டாக்டர் ராவணன் ஆ.இர.ராமசாமிநாடார் அவர்களும் ஒருவராவர் என வாழ்த்தி பேசினார். பாரத மாதா நண்பர்கள் அன்னதானக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் பேசி முடித்ததும் சமுதாய சொந்தங்களிடம் இருந்து வானை பிளக்கும் வகையில் கைதட்டல் ஒலித்தது.
இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி தன் நாட்டு மக்களை சந்தித்து நல்லாட்சியை தொடங்கியதும், திருச்செந்தூர் மாசித்திருவிழாவின் 9ம் திருவிழா நாடார் சமுதாயத்தினருக்கு சொந்தமான 9ம் திருநாள் அன்று சிம்மப்பேரவையின் முப்பெரும் விழாவை நடத்தியது மிகவும் சிறப்பு வாய்ந்தது என பேசி இச்சமுதாயத் தொண்டினை தொடர்ந்து செய்து வர வாழ்த்துகிறேன் என பேசி நிறைவு செய்தார்.