தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் விருதுகளை வழங் கினார்.
தூத்துக்குடியில் தாய்மை உதவும் கரங்கள் அறக்கட் டளை சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.இவ்விழா விற்கு அறக்கட்டளை நிறு வனர் பி. ராஜம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல் வர் எம்.எஸ். ரூபா வரவேற்பு ரையாற்றினார். பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நிகழ்வில் பங்கேற்று, பல் வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கினார். மருத்துவம், கல்வி, கலை மற்றும் சமூக சேவைத் துறைகளில் சிறந்து விளங்கிய முனைவர் எம்.எஸ். ரூபா, பல் மருத்துவர் ஐஸ்வர்யா, டாக்டர் ராஜலட்சுமி, வழக்கறிஞர் விஜயலட்சுமி, தொழிலதிபர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பாடகி விஸ்வரூபினி மற்றும் பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட் டோருக்கு அமைச்சர் விருது களை வழங்கினார்.
இவ்விழாவில் மாற்றுத் திறனாளிகள், கைம்பெண் கள் மற்றும் நலிவடைந் தோருக்குப் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. மேலும், முனைவர் சகா.மா. சங்கர் கலைக் குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கேற் பாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.