Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!

தூத்துக்குடி : தூத்துக் குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே மின்மாற்றி திடீரென வெடித்துத் தீப்பிடித்ததால் அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

இன்று மாலை சுமார் 5 மணி அளவில், எட்டையபுரம் சாலை யில் உள்ள புதிய பேருந்து நிலை யத்தின் அருகிலுள்ள மின்மாற்றி எதிர்பாராதவிதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் மின்மாற்றி முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பாதுகாப்பு கருதி, மின் மாற்றியைச் சுற்றியிருந்த அனைத் துக் கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன. மின்மாற் றிக்கு மிக அருகிலேயே நிறுத்தப்ப ட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத் தின் மீது தீப்பொறிகள் விழுந்த தில், அந்த வாகனம் மளமளவென எரியத் தொடங்கியது. இதில் அந்த வாகனம் முழுவதுமாகத் தீயில் கருகி எலும்புக்கூடாக மாறியது.

தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடை யில், மின்வாரிய அலுவலர்கள் அந்தப் பகுதியில் மின்சார இணைப்பைத் துண்டித்து விபத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்தத் தீ விபத்து குறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில்: "மின்மாற்றியில் அதிக அளவு மின் அழுத்தம் ஏற் பட்டதன் காரணமாக, உட்புறத் தில் உள்ள மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந் துள்ளது" என்றனர். இந்த விபத் தினால் தூத்துக்குடி எட்டையபு ரம் சாலை பகுதியில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட் டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் நிலவியது.