Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சென்னை, மார்ச் 17: ‘தமிழ் சிறுகதைகளின் தடங் கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வ னுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங் கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங் கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக் கப்பட்டுள்ளது.

ச.தமிழ்ச்செல்வனுக்கு ஏற் கெனவே சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந் தது. ஆனால் பல்வேறு கார ணங்களால் நிறுத்தி வைக் கப்பட்டது கவனிக்கத்தக்கது. இவ்விருது குறித்து அவர், ‘தனக்கு இந்தப் புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது. 50-க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக் கிறேன்’ என்று தெரிவித்துள் ளார்.