Sunday, 21 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

இன்று காலை குறைந்த தங்கம் விலை: சந்தை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை உயர்ந்திருந்த நிலையில், இன்று (ஏப்.7) காலை வர்த்தகம் தொடங்கியதும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளியின் சந்தை நிலவரம் குறித்து பார்ப்போம்.

மேற்காசிய போர், சர்வதேச பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மறுபக்கம் உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்தச் சூழலில் சென்னையில் நேற்று பிற்பகல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990-க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,920-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.130 மற்றும் பவுனுக்கு ரூ.1,040 என விலை குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.13,860-க்கும், ஒரு பவுன் ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,136 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,20,960-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,480-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.