தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் தேதிகலை ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியும், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 9ம் தேதியான இன்றும்.., ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்திலும் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..அதோடு அனைத்து மாநிலங்களுக்கும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. அதோடு ஏப்ரல் 9 முதல் 29 ஆம் தேதி வரை கருத்துக்கணிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 9ம் தேதியான இன்று புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. தற்போது அந்த மூன்று மாதங்களிலும் வாக்குப்பதிவு முடிந்து விட்டது..புதுச்சேரியில் மாலை 5 மணி வரை 86 சதவீதமும், கேரளாவில் 75.01 சதவீதமும், அசாமில் 84.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது.