Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“எங்களை அச்சுறுத்திய ஈரான் இப்போது உயிர்பிழைக்கப் போராடுகிறது” - நெதன்யாகு

டெல் அவிவ்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், “நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அவர்களே உயிர் பிழைக்கப் போராடுகிறார்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலம், அவர்களின் அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை நசுக்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை, ஆனால் நாம் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்காவும் ஈரானும் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நெதன்யாகுவின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன. அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.