Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கொல்கத்தா அணி​யுடன் இணைகிறார் பதிரனா!

கொழும்பு: இலங்கை கிரிக்​கெட் அணி வீரர் மதீஷா பதிரனா, விரை​வில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருடன் ​(கேகேஆர்) இணை​ய​வுள்​ளார். ஐபிஎல் போட்​டிகளில் கேகேஆர் அணிக்​காக ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுக்​கப்​பட்​டார் மதீஷா பதிரனா.இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்​கெட் வாரி​யம் அவருக்கு என்​ஓசி-யை வழங்​கி​யுள்​ளது. இதையடுத்து அவர் கேகேஆர் அணி​யினருடன் விரை​வில் இணை​வார் என்று கொல்​கத்தா அணி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

சென்​னை​யில் நாளை (ஏப்​ரல் 14) நடை​பெறவுள்ள சிஎஸ்​கேவுக்கு எதி​ரான போட்​டி​யில் அவர் களமிறங்​கு​வது கடினமே. அநேக​மாக அவர் வரும் 17-ம் தேதி அணியினருடன் இணை​வார் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக கேகேஆர் அணி வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.