Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஜொலிக்கப் போவது யார்?

மாநிலமே உற்​று​நோக்​கும் விஐபி தொகு​தி​யான சேப்பாக்கம் - திரு​வல்​லிக்​கேணி​யில் 2-வது முறை​யாக வெற்​றிக்​க​னியைப் பறிக்​கத் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தீவிர முனைப்பு காட்டி வரு​கிறார்.

இத்​தொகு​தி​யில், திமுக சார்​பில் உதயநிதி ஸ்டா​லின்,அதி​முக சார்​பில் ஆதி​ராஜா​ராம், தவெக சார்​பில் செல்​வம், நாதக சார்​பில் ஆயிஷா பேகம், பகுஜன் சமாஜ் சார்​பில் முகமது யாசர், தவாக சார்​பில் இர்​பான் பாஷா மற்​றும் 20 சுயேச்சை வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர்.

திமுக - வளர்ச்சிப் பாதையில் சேப்பாக்கம்

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், “சேப்​பாக்​கம் இன்று வளர்ச்​சிப் பாதை​யில் உள்​ளது. இந்த மக்​கள் நலப்​பணி​கள் இன்​னும் வீரிய​மாகத் தொடர உதயசூரியன் சின்​னத்​திற்கு வாக்​களி​யுங்​கள் என, உருக்​க​மாகக் கோரிக்கை விடுத்து வரு​கிறார்.


அதி​முக - அடித்​தட்டு மக்​களின் வாழ்​வா​தா​ரம் மீட்​கப் பாடு​படுவேன்

அதி​முக வேட்​பாளர் ஆதி​ராஜா​ராம், “மக்​களு​டன் தொடர்​பில் இல்​லாத ‘விஐபி கலாச்​சா​ரத்​தை’ ஒழித்​து, தொகுதி மக்​களுக்​காக 24 மணி நேர​மும் உழைக்​கக் கூடிய எளிய பிர​தி​ நி​தி​யாக நான் இருப்​பேன்.

நாதக - ​ஊழல் மற்​றும் லஞ்​சமற்ற நிர்​வாகம்

நாதக வேட்​பாளர் ஆயிஷா பேகம், “மாற்​றம் என்​பது சொல் அல்ல செயல்” என்​கிற தாரக மந்​திரத்​துடன், திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாகத் தன்னை முன்​னிறுத்தி வரு​கிறார்.

தவெக-​மக்களின் கோட்டையாக மாறும்

தவெக வேட்​பாளர் செல்​வம், “சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி இனி ஒரு குடும்​பத்​தின் கோட்​டை​யாக இருக்​காது. அது மக்​களின் கோட்​டை​யாக மாறும்.பெண்​களின் பாது​காப்​பிற்கு முன்​னுரிமை அளிப்​ப​தோடு, இளைஞர்​களின் எதிர்​காலத்​தைச் சீரழிக்​கும் போதைப் புழக்​கத்​தைத் தொகு​தியி​லிருந்து வேரோடு ஒழிக்​கக் கடுமை​யான நடவடிக்கை எடுப்​பேன்” என கூறி, வாக்கு சேகரித்து வருகிறார்​.