Saturday, 20 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சேகர் பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்.13) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இதனிடையே, அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன், விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் இச்சோதனையை நடத்தி வருகிறார்கள். அதோடு, மத்திய பாதுகாப்பு படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் காலை முதலே மயிலாப்பூர், வடபழனி, கீழ்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் தீடீர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனை முடிந்த பிறகுதான் கைப்பட்டப்பற்ற ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது.