Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ படத்தை பதிவிட்ட ட்ரம்ப்!

வாஷிங்டன்: கத்​தோலிக்க திருச்​சபை தலை​வர் போப் பற்றி விமர்​சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்​களில், தன்னை இயேசு​வாக சித்​தரிக்​கும் ஏஐ புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்​தினம் கத்​தோலிக்க திருச்​சபை​யின் தலை​வர் போப் 14-ம் லியோ பற்றி செய்​தி​யாளர்​களிட​மும் சமூக வலை​தளங்​களி​லும் பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைத்​தார். தான் போப்​பின் ரசிகர் அல்ல என்​றும் அவர் சிறந்த முறை​யில் செயல்​பட​வில்லை என்​றும் கூறி​னார்.

மேலும் போப் மிக​வும் தாராள​வாதி என்​றும் தீவிர இடது​சா​ரி​கள் என்று அழைப்​பவர்​கள் மீது அதிக அனு​தாபம் கொண்​ட​வர் என்​றும் குற்​றம் சாட்​டி​னார். குறிப்​பாக அமெரிக்கா மற்​றும் வெளி​யுறவுக் கொள்கை தொடர்​பான பிரச்​சினை​களில் அரசி​யல் வர்​ணனை செய்​வதை விடுத்​து, போப் தனது ஆன்​மிகக் கடமை​களில் கவனம் செலுத்த வேண்​டும் என்​றும் ட்ரம்ப் தெரி​வித்​தார்.அந்த படத்​தில், அவர் நீண்ட அங்​கி​களை அணிந்​து, நோய்​வாய்ப்​பட்ட ஒரு மனிதன் மீது தனது கையை வைத்​திருப்​பது போல​வும், பார்​வை​யாளர்​கள் மரி​யாதை​யுடன் பார்த்​துக் கொண்​டிருக்க அவரது விரல்​களி​லிருந்து ஒளி வீசுவது போல​வும் காட்​டப்​பட்​டிருந்​தது. இந்​தத் தோற்​றம், லாசரஸை இயேசு உயிர்த்​தெழுப்​பிய விவிலியக் கதையை எதிரொலித்​தது.

அப்​படத்​தைச் சுற்​றி​யுள்ள படங்​களில் அமெரிக்​கக் கொடிகள், ராணுவ விமானங்​கள், பறக்​கும் கழுகு​கள் மற்​றும் வானத்​தில் தேவதூதர்​களின் உரு​வங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. போப் பற்​றிய விமர்​சனத்​துக்​குப் பிறகு இந்​தப் படம் வெளி​யான​தால், இது விரை​வாக மக்​களின் கவனத்தை ஈர்த்​தது.