விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `கர' படம் ஏப்.30ம் தேதி வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து அவர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்தார்.பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆரின் `டிராகன்' படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சாரா அர்ஜுனிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், ‘துரந்தர்’ வெற்றி மூலம் முன்னணி நடிகையாகி இருக்கிறார்.