Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் மெக்கல்லம்?

சென்னை: அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் மீண்டும் இணைய உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 ஆட்டங்களில் ஐந்து தோல்வியை பெற்றுள்ளது. மழையால் பஞ்சாப் கிங்ஸ் அணி உடனான ஆட்டம் கைவிடப்பட்டது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி உள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் கேகேஆர் சொதப்புகிறது.

கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் 158 ரன்களை கொல்கத்தா அணிக்காக மெக்கல்லம் விளாசி இருந்தார். தொடர்ந்து 2020 முதல் 2022 சீசன் வரையில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் செயல்பட்டார்.

அதன் பிறகு அவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இணைந்தார். அவரது பயிற்சியின் கீழ் 2021 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. வரும் 2027 இறுதி வரையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட மெக்கல்லம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இத்தகைய சூழலில் பீட்டர்சனின் பதிவு பேசு பொருளாகி உள்ளது.