Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“நாங்களும் மோசமாகப் பேசினால் ஸ்டாலின் தாங்க மாட்டார்” - அன்புமணி

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் என்​னை​யும், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை​யும் மோச​மாக விமர்​சனம் செய்து வரு​கி​றார். பதி​லுக்கு நாங்​களும் பேசி​னால் முதல்​வ​ரும், உதயநி​தி​யும் தாங்க மாட்​டார்​கள் என பாமக தலை​வர் அன்​புமணி பேசி​னார்.அவ்​வாறு பேசி​னால் முதல்​வ​ரும், உதயநி​தி​யும் தாங்க மாட்​டார்​கள். அவ்​வாறு பேசி மக்​களின் கவனத்தை திசை திருப்​ப​வும் விரும்​ப​வில்​லை. திமுக ஆட்​சி​யின் அவலங்​களை மக்​களிடம் கூறி வாக்கு சேகரித்து வரு​கி​றோம். 5 ஆண்​டு​கால ஆட்​சி​யில் செய்த சாதனை​களைக் கூறி மக்​களிடம் வாக்கு கேட்​காமல் ரூ.8,000 போலி கூப்​பனை காட்டி திமுக அணி​யினர் வாக்கு கேட்​பது வெட்​கக்​கேடு இல்​லை​யா?

தமி​ழ​கத்​தில் கடந்த 5 ஆண்டு கால​மாக ஒரு நரக ஆட்​சியை திமுக நடத்​திக் கொண்​டிருக்​கிறது. சின்ன குழந்​தைகளை பாலியல் கொடுமை செய்து கொலை செய்​யக் கூடிய குற்​றங்​கள் நடப்​ப​தாக திமுக ஆட்சி உள்​ளது. இதெல்​லாம் மாற தமிழக முதல்​வ​ராக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வர வேண்​டும்.

வரவிருக்​கும் தேர்​தலில் தரு​மபுரி மாவட்​டத்​தின் 5 சட்​டப் பேரவை தொகு​தி​களி​லும் திமுக அணியை டெபாசிட் இழக்​கச் செய்​யுங்​கள். தரு​மபுரி மாவட்​டத்​துக்கு திமுக அரசு மிகப்​பெரிய துரோகம் செய்​திருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.