வாஷிங்டன்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது அதை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டித்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம்.முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்தது அமெரிக்கா. இந்த வரி விதிப்பு இந்தியா மீதும் சுமத்தப்பட்டது. அதன் பின்னர் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இத்தகைய சூழலில் மேற்காசிய போர் காரணமாக ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க முப்பது நாட்கள் விலக்கு அறிவித்தது அமெரிக்கா. அந்த விலக்கு ஏப்.11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது அதை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்துள்ளது அமெரிக்கா.தற்போது அந்த அனுமதி மே 16 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் சிக்கல் இருக்காது.