Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி!

ஹைதராபாத்: சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்​சத்​திர வீரர் எம்​.எஸ்​.தோனி வேக​மாக குணமடைந்து வரு​கிறார் என்று அணி​யின் பேட்​டிங் பயிற்சி​யாளர் மைக்​கேல் ஹஸ்ஸி தெரி​வித்​தார்.இதுகுறித்து அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாளர் மைக்​கேல் ஹஸ்ஸி கூறிய​தாவது: தோனி​யின் காயத்​துக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர் வேக​மாக குணமடைந்து வருகிறார். நேற்று முன்​தினம் நடை​பெற்ற வலைப்​பயிற்சியின்​போது அவர் பேட்​டிங் செய்​தார். அவர் சிறப்பாக பேட்​டிங் செய்​கிறார்.

இது எனக்கு மிக​வும் மகிழ்ச்​சியை அளிக்​கிறது. அவர் வேகமாக குணமடைந்து வரு​வதை இது காட்​டு​கிறது. மேலும், ஆடு​களத்​தில் அவர் ஓடி பயிற்சி எடுப்​ப​தை​யும் பார்த்​தேன். தனது ஓடும் திறனை மேம்​படுத்​தும் பணி​யில் தோனி ஈடு​பட்​டுள்​ளார். இன்​னிங்​ஸின் இறு​தி​கட்​டத்​தில் பேட்​டிங் செய்ய நேர்ந்​தால், இரண்டு ரன்​கள் எடுக்​கும் நிலை வரும்​போது வேக​மாக ஓட வேண்​டி​யிருக்​கும்.

அவர் தனது ஓடும் திறனில் நம்​பிக்​கை​யைப் பெற​வும், அந்த வேகத்தை வளர்த்​துக்​கொள்​ள​வும் மட்​டுமே இப்​போது பயிற்சி பெறுகிறார். அவர் எப்​போது அணிக்​குத் திரும்பி விளை​யாடு​வார் என்​பது எனக்​குத் தெரி​யாது; ஆனால், ரசிகர்​களைப் போலவே நானும், அது கூடிய விரை​வில் நடக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு மைக்​கேல் ஹஸ்​ஸி தெரி​வித்​தார்​.