சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருக்கிறது.
அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 100 ஆக இருந்தது.