விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டு முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிராக தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டியும் கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா ஆகியோர் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் ராஜ செல்வம், மாடசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை கண்டன கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.