புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்து, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அதிரடியாக அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையின் அறிவிப்புப்படி, நீட் மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமின்றி, மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணமும் உரிய முறையில் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்காக மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவோ அல்லது பதிவு செய்யவோ தேவையில்லை. மாணவர்களின் முந்தைய பதிவு விவரங்கள், தகுதிநிலை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த தகவல்கள் அப்படியே மறுதேர்வுக்கும் எடுத்து கொள்ளப்படும்.
மறுதேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரும் வாரங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.