Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து திமுக உறுப்பினர்கள் நாளைக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக உறுப்பினர்கள் எவ்வித தயக்கமுமின்றி தேர்தல் முடிவுகள் குறித்து மனதில் தோன்றும் கருத்துகளை இணையத்தளம் மூலம் தெரிவிக்கலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் முடிவுகள் குறித்து http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளை பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான்.

உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும். இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே 31ம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை http://udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

கழக மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்த செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.