Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தியே அண்ணாமலையின் இயக்கம்” - பெ.சண்முகம் விமர்சனம்

சென்னை: “ஆர்எஸ்எஸ் ஏற்கெனவே 2,500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2,501 அவ்வளவுதான்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி. ஆர்எஸ்எஸ் ஏற்கெனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2,501 அவ்வளவுதான்.

பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித் ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.