Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சிறப்பு டெட் தேர்வுக்கு இணையவழியில் பயிற்சி: ஆசிரியர்களுக்கு நாளை முதல் தொடங்குகிறது

Follow Us


சென்னை: பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவதை உச்ச நீதிமன்றம் கட்டாய மாக்கியது. இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதையொட்டி நாளை (ஜூன் 8) முதல் ஜூன் 30-ம் தேதி வரை மாலை 6.30 முதல் 8 மணி வரை இணையவழி பயிற்சி நடைபெறும். இதை தேர்வெழுதும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.