Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஆசிய போட்டிக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு!

மும்பை: ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி - நகோயா நகரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. டி20 ஃபார்மெட்டில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கான உத்தேச இந்திய கிரிக்கெட் அணி விவரம் கடந்த மாதம் வெளியானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி2026-க்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். இதில்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

அண்மையில் முடிந்த ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் 16 இன்னிங்ஸில் 776 ரன்களை சேர்த்திருந்தார் வைபவ் சூர்யவன்ஷி. இதன்மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆனார். அதோடு இந்த சீசனில் மொத்தம் 72 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய அணி:

  1. ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்)
  2. அபிஷேக் சர்மா
  3. சஞ்சு சாம்சன்
  4. இஷான் கிஷன்
  5. ஷிவம் துபே
  6. திலக் வர்மா (துணை கேப்டன்)
  7. நிதிஷ் குமார் ரெட்டி
  8. அக்சர் படேல்
  9. வாஷிங்டன் சுந்தர்
  10. வருண் சக்கரவர்த்தி
  11. ரவி பிஷ்னோய்
  12. ஹர்ஷித் ராணா
  13. அர்ஷ்தீப் சிங்
  14. பும்ரா
  15. வைபவ் சூர்யவன்ஷி