Friday, 16 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழகம் வருகை தரும் மோடியை வரவேற்கும் விதமாக கரூர் நெசவாளியின் சாதனை!

கரூர்: பிரதமர் மோடி வரும் 11ம் தேதி, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உட்பட, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாகவும் அவரின் உருவப்படத்தினை நெய்து அசத்தி வரும் அவர் அந்த துணியினை தன் கையால் பாரத பிரதமருக்கு கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த எலனூரை சார்ந்தவர் பிரபு. இவரது குடும்ப தொழில் நெசவு நெய்தல். சிறு வயது முதலே நெசவில் ஆர்வம் கொண்ட இவர் படிப்படியாக வளர்ந்து தற்போது ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். பிரதமர் மோடி மேல் உள்ள பற்றாலும் அவர் வரும் 11 ம் தேதி தமிழகம் வரும் நிலையில் அவரை வரவேற்கும் விதமாக அவரது கையால் பிரதமர் மோடியின் உருவப்படத்தினை அவரே டிசைன் செய்து, கம்யூட்டரில் ஏற்றி, அதனை தனது சொந்த தறியில் நெசவு செய்து வருகிறார்.

இன்று தொடங்கிய இந்த பணி, நாளொன்றுக்கு 8 துணி வீதம் 3 நாட்களில் 24 துணிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டு தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 40 அங்குலம் உயரம், 10 அங்குலம் அகலம் கொண்ட இந்த துணி தயாரிக்க ரூ 900 ரூபாய் செலவாகும் என கூறும் பிரபு அதனை அவரே அவரது கையில் பிரதமர் மோடிக்கு வழங்க வேண்டும் என்றும் ஆரவத்துடன் தெரிவிக்கும் பிரபு, இந்த துணியினை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக நெசவாளர்கள் சார்பாகவும் இந்த ஆடையினை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதே போன்று திருக்குறள் மீதுள்ள பற்றால் திருக்குறளின் பெருமையையும், கரூரின் பெருமையையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அவர் உற்பத்தி செய்த துணியில் திருக்குறளை ஸ்கிரீன் பிரிண்ட் செய்து புத்தகமாக தயார் செய்துள்ளார். ஒரு பக்கத்திற்கு 10 குறள் கொண்ட ஒரு அதிகாரன் என 133 பக்கத்தில் 1330 திருக்குறளை அச்சிட்டுள்ளார். சுமார் 8 கிலோ எடையுள்ள இந்த புத்தகத்தை தயாரிக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள இவர் இந்த புத்தகத்தினையும் பிரதமருக்கு கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இவர் ஜெயிலர் 2 போஸ்டரை தயாரித்தும், திருவள்ளுவர், அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவப்படத்தினை நெய்தும் சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது