Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பிரதமர் மோடிக்கு சுவீடன், நார்வேயின் உயரிய விருது

ஸ்டாக்ஹோம்/ஓஸ்லோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன், நார்வே நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.


கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடி சுவீடன் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற விழாவில் பட்டத்து இளவரசி விக்டோரியாவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு சுவீடனின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' வழங்கப்பட்டது. பட்டத்து இளவரசி விக்டோரியா விருதை வழங்கி கவுரவித்தார்.


கடந்த 18-ம் நூற்​றாண்​டில் இந்த விருது தோற்​று​விக்​கப்​பட்​டது. வெளி​நாட்டு தலை​வர்​களின் சிறந்த பொதுச்​சேவைக்​காக​வும், சுவீடன் உடனான உறவை வலுப்​படுத்​து​வ​தில் அவர்​கள் ஆற்​றிய பங்​களிப்​பிற்​காக​வும் இவ்​விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விருதைப் பெற்ற முதல் ஆசி​யத் தலை​வர் என்ற பெரு​மையை பிரதமர் நரேந்​திர மோடி பெற்​றிருக்​கிறார். அவர் கூறும்​போது, ‘‘பட்​டத்து இளவரசி விக்​டோரி​யா​வுக்​கும் சுவீடன் மக்​களுக்​கும் நன்​றி. இந்த விருதை 140 கோடி இந்​திய மக்​களுக்​கும், இந்​தியா – சுவீடன் நாடு​களுக்கு இடையே​யான நீண்ட கால நட்​புக்​கும் அர்ப்பணிக்​கிறேன்.


இரு நாடு​களுக்கு இடையே உள்ள வரலாற்று மற்​றும் கலாச்​சா​ரப் பிணைப்பை விருது உறு​திப்​படுத்​துகிறது. இரு நாட்டு மக்களிடையே நீடிக்​கும் அன்​புக்​கும் சான்​றாக அமைந்​துள்​ளது’’ என்று தெரி​வித்​தார்.சுவீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்​றார். அங்கு அந்த நாட்டு மன்​னர் ஐந்​தாம் ஹரால்டை அவர் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது நார்வே நாட்​டின் மிக உயரிய ‘‘ராயல் நார்​வேஜியன் ஆர்​டர் ஆஃப் மெரிட்​டின் கிராண்ட் கிராஸ்’’ விருதை பிரதமர் மோடிக்கு மன்​னர் ஹரால்டு வழங்​கி​னார்.


இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “இந்த விருதைப் பெறு​வ​தில் மிகுந்த பெருமிதம் கொள்​கிறேன். இதை இந்​திய மக்​களுக்கு அர்ப்​பணிக்கிறேன். இந்​தி​யா, நார்வே இடையி​லான நட்​புறவுக்கு விருது சான்​றாக விளங்​கு​கிறது. உலக நாடு​களின் முன்னேற்றத்துக்​காக இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்படுகின்​றன. இந்த அர்ப்​பணிப்பு உணர்​வை​யும் விருது பிரதிபலிக்​கிறது’’ என்றார்.


அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய நாடு​கள், வளை​குடா நாடு​கள் உட்பட உலகின் பல்​வேறு நாடு​கள் பிரதமர் நரேந்​திர மோடிக்கு உயரிய விருதுகளை வழங்கி உள்​ளன. நார்வே வழங்​கிய விருதையும் சேர்த்து அவர்​ இது​வரை 32 சர்​வ​தேச விருதுகளைப்​ பெற்​றுள்​ளார்​.