Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பெரம்பலூரில் 10வது பெரம்பலூர் புத்தகத்திருவிழா

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா 27.02.2026 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

மூன்றாம் நாளான இன்றைய (01.03.2026) நிகழ்ச்சிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிறுவனத்தினர் ஒருங்கிணைப்புப் செய்தனர்.

இன்றைய நிகழ்ச்சியில் தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “புத்தகங்களின் பயணம்” என்ற தலைப்பிலும், கவிஞர் கலைமாமணி நெல்லை ஜெயந்தா அவர்கள் “கை நிறைய கவிதைகள்” என்ற தலைப்பிலும், பிக்பாஸ் புகழ் மஞ்சரி நாராயணன் அவர்கள் ”கற்பவை கற்ற பின்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.

ஏராளமான பொதுமக்களும், மாணவ மாணவிகளும் வருகை தந்து புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு, சிந்தனை அரங்கின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு கேட்டு மகிழ்ந்தனர்.

நான்காம் நாளான 02.03.2026 அன்று பேராசிரியர், முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் “சொல்லே மந்திரம்” என்ற தலைப்பிலும், சூழலியல் அறிஞர் கோவை சதாசிவம் அவர்கள் “எறும்புகளின் வரிசை கலைகிறது” என்ற தலைப்பிலும், திரு.ராஜம் எம்.பி.நாதன் அவர்கள் “மாபெரும் சபைதனில்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

100 அரங்குகளில், 10,000 தலைப்புகளில் 1லட்சம் புத்தகங்களுடன் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் அனைத்து புத்தகங்களுக்கும் விலையில் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். தினந்தோறும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.