பெரம்பலூர், மார்ச் 10:
பெரம்பலூர் மாவட்ட நிர் வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 27.02.2026 அன்று கோலாகல மாகத் தொடங்கி 10 நாட் கள் தொடர்ந்து நடைபெற்ற 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மிருணா ளினி தலைமையில் நடை பெற்றது.
நிறைவுநாள் விழாவினை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள் ஒருங் கிணைத்து வழங்கினர். புத்தக அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, தினந் தோறும் வருகை புரிந்த நபர்களின் எண்ணிக்கை, விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் விவரங்கள் குறித்து புத்தக பதிப்பாளர் களிடம் கேட்டறிந்தார்.
10 நாட்கள் புத்தகத் திரு விழாவினை சிறப்பான ஒருங்கிணைத்து வழங்கிய தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், ஆதவ் பப்ளிக் பள்ளி, ஆபிசர்ஸ் கிளப், பெரம்பலூர், ஈடன் கார்டன் கல்வி நிறு வனங்கள், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனத்தார்களையும், பபாசி அமைப்பினர் , மக் கள் பண்பாட்டு மன்ற தலைவர்சரவணன், செய லர் அரவிந்தன் ஆகியோருக் கும் மாவட்ட ஆட்சித்தலை வர் பொன்னாடை அணி வித்து, புத்தகம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.
மேலும், புத்தகத்திருவிழா சிறப்புடன் நடக்க பணி யாற்றிய அரசுத்துறை அலு வலர்கள், தன்னார்வலர் அமைப்பினரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவித்தார்கள்.
மேலும், இன்றைய நிறைவு நாள் விழாவில் கலைமாமணி, பேராசிரியர், முனைவர் கு.ஞானசம் பந்தம் நடுவராக பங்கேற்ற “மனித மனங்களை மென் மைப்படுத்துவது கலையா?, இலக்கியமா?” என்ற தலைப் பில் பட்டிமன்றம் நடை பெற்றது. பத்து நாட்கள் மிக எழுச்சியோடும், சிறப் போடும் நடைபெற்ற புத்தகத் திருவிழாவினை 75,722 பேர் பார்வையிட் டுள்ளனர். ரூ.92,10,240 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
100 அரங்குகளில், 10,000 தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் நடை பெற்ற புத்தகத் திருவிழாவில் அனைத்து புத்தகங்களும் அதன் விலையில் 10% சிறப்பு தள்ளுபடி வழங் கப்பட்டன. தினந்தோறும் குலுக்கல் முறையில் தேர்ந் தெடுக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங் கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர் க.கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன் உள் ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.