Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அம்மா பிறந்தநாளில் கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் 1000 பேருக்கு அறுசுவை அன்னதானம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,வி. களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாரம்பூண்டி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுகவின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளில் கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.காவியா ரவி ஏற்பாட்டில், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் 1000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கா. ரவிச்சந்திரன், ஒன்றிய இணைச் செயலாளர் கலாவதி கண்ணபிரான், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வி.ஜி.எம் வெங்கடாஜலம்,மாவட்ட மகளிரணி இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர்(கி) ஆர்.ரஞ்சித் குமார், ஊராட்சி கழகச் செயலாளர் கே.முகமது கவுஸ்,எம்.கருப்பையா, டி.பால்ராஜ், எஸ்.சத்யராஜ்,எல்.மோகன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டினை கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.காவியா ரவி செய்திருந்தார்.