Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை கே.என்.அருண் நேரு எம்பி. திறந்து வைத்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு அவர்கள், ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.11.10கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிராபகரன் அவர்கள் முன்னிலையில் திறந்து தொடங்கி வைத்தார் .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களை மேம்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வருகிறார்கள். குறிப்பாக நகர மற்றும் கிராமப் புறங்களை மேம்படுத்தும் வகையில், புதிய தார் சாலை அமைத்தல், சாலைகளை மேப்படுத்துதல், பயணியர் நிழற்கூடம் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில், இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்ருத் 2.0 குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.11.10 கோடி மதிப்பில் அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் சுமார் 13,518 பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நபருக்கு 75 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலைமாறி, அம்ரூத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததால் இனிவரும் காலங்களில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, வேப்பந்தட்டை வட்டம் எறையூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தினையும் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 லட்சம் மதிப்பில் வாலிகண்டபுரம் இஸ்லாமியர் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினையும் பெரம்பலூர் பராளுமன்ற உறுப்பினர் திரு.கே. என்.அருண் நேரு அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். ஆகமொத்தம் இன்று ரூ.12,85,80,000 மதிப்பிலான திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.துவாரகநாத் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா குமரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் (அரும்பாவூர்) சபிதாராகிணி, தியாகராஜன் (குரும்பாலூர்), ரூக்மனி (பூலாம்பாடி), பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சிவக்குமார், பேரூராட்சி இளநிலை பெறியாளர் ரத்தினகுமார், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.