Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு வர்த்தகர் சங்கமத்தின் சார்பில் 3000 பக்தர்களுக்கு குளிர் பானம் வழங்கல்

மூன்றாவது ஆண்டாக தொடரும் சேவை

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் நகரின் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். ஆண்டு தோறும் பூவோடு எடுத்தல், அலகு குத்துதல் என்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் அலகு குத்தும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். ஆயிரக்கணக் கான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை காண கூடுவார்கள். பொது மக்கள் தாகம் தணிக்க ஆண்டுதோறும் தமிழ் நாடு வர்த்தகர் சங்கமத்தின் நிர்வாகிகள் சார்பில் குளிர்பானங்கள் வழங்கப்படு வது வழக்கம்.

மத நல்லிணக்கத்தை வலியு றுத்தும் வகையில் நிர்வாகிகள் இந்த சேவையை செய்து வரு கிறார்கள். மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் அந்த சேவை செய்யப்பட்டது. 3000+ பக்தர்களுக்கு சேவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டை பொள் ளாச்சி கிளையின் தலைவர் செல்வசிங் தலைமையில் நிர்வாகிகள் பொருளாளர் சலீம், சரோஜா ஸ்டோர் பாபு, வாரி மெடிக்கல்ஸ் ராமு, சச்சின், தேவி ஸ்வீட்ஸ் ராதா கிருஷ்ணன், ஸ்ரீதேவி ஸ்வீட்ஸ் சுந்தரமூர்த்தி, சக்தி பால் கணே சன், ஜெயக்குமார், மகாராஜன், வி எம் எஸ் ரங்கதுரை, தங்க செல்வம், சண்முகராஜ், தனஞ் ஜெயன், கார்த்திக், ஜெயராஜ், பாலசந்தர், சத்தியவர்த்தி, பெருமாள், ஆகியோர் ஏற்பாடு செய்து வழங்கினர். சேவை வழங்கிய பொள்ளாச்சி கிளை நிர்வாகிகளை மாநிலத் தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் வாழ்த்தியுள்ளார்.