Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.35 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜை! எம்.எல்.ஏ., தாமோதரன் துவங்கி வைத்தார்

பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பச்சாபாளையம், வி.எஸ்.வி நகரில் ரூ. 6.55 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக பூமிபூஜை பணிகளை எம்.எல்.ஏ தாமோதரன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். அருகில் முன்னாள் எம்.எல்.ஏ., எட்டிமடை சண்முகம் மற்றும் பலர் உள்ளனர்

கோவை: கிணத்துக்கடவு தொகுதியில், ரூ. 35 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளை, எம்.எல்.ஏ., தாமோதரன் பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் வி.எஸ்.வி நகரில் 6 லட்சத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கவும், தீத்திபாளையம் ஊராட்சியில், காளம்பாளையத்தில் ரூ. 7 லட்சத்தில் பஸ் ஸ்டாப் அமைக்கவும், முத்து நகரில், ரூ. 8 லட்சத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கவும், மாதம்பட்டி ஊராட்சியில், செல்லப்ப கவுண்டன் புதூரில், ரூ. 6:50 லட்சத்தில் சாக்கடை வடிகால் அமைக்கவும், மாதம்பட்டியில், ரூ. 7 லட்சத்தில் பஸ் ஸ்டாப் அமைப்பது உள்பட, மொத்தம் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, பச்சாபாளையம் வி.எஸ்.வி நகரில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி. பிரசாத் வரவேற்றார்; முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், முன்னிலை வகித்தனர்.

இதில், கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ தாமோதரன் கலந்து கொண்டு, தொகுதிக்குட்பட்ட பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஊராட்சிகளில் மொத்தம் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஜி.பி. பாபு, நந்தகோபால், பச்சாபாளையம் கிளை செயலாளர் ரமேஷ், கார்த்திகேயன், கிளைச் செயலாளர் முருகேஷ், வரதராஜ், மனோஜ், தங்கதுரை, மார்க்கண்டன் மற்றும் வி.எஸ்.வி நகர் குடியிருப்பு மக்கள் கலந்து கொண்டனர்‌.